link to Home page of 86-06 Edgerton Blvd, Jamaica, NY 11432-2937 - 718 575-3215
The Archives
 
pdf

Advent

Admiration

01 September 2023


பகவான் அருணை நுழை திருப்புகழ் வாய்ப்பாடு தனதன தனதன தந்தத் தந்தத் தனதான ......தனதன தனதன தந்தத் தந்தத் தனதானா (பரிமள களப என்ற திருப்புகழ் மெட்டில்)

பாடல்

கதவித(ழ்) அவிழுற அன்றுட் சென்(று)ள் ஐக்
கியமானோய்
......கருவறை மலையனை வந்தித் து(உ)ந்தைக் கலமானோய்
உதறினை உடமையை உன்பற் று(உ)ந்தித்தெளிவோனே
......உனையடை அடியவ(ர்) எம்பற் றும் பிட்(டு)அருள்வாயே
அதிசய மழைநனை அங்கித் தங்கக்கதிரோனே
......அடிமடி வகிர்துணி அங்கத் துண்டைத்தரிபாலா
மதிலறு அருணையி(ல்) என்றைக் கும் தத்துவமானோய்
......மலைமக ரமணநி(ன்) அன்பர்க் (கு)இன்பப் பெருமாளே
	
kadhavidhazh avizhvuRa andrut chendraik kiyamAnOy
karuvaRai malaiyanai vandhit thundhaik  kalamAnOy
udhaRinai udamaiyai unpatrundhith       theLivOnE
unaiadai adiyavar empatrum pit          taruLvAyE
adhisaya mazhainanai angith thangak     kadhirOnE
adimadi vagirthuNi angath thuNdaith     tharibAlA
madhilaRu aruNaiyil endraikkum thatth   thuvamAnOy
malaimaga ramaNanin anbark kinbap       perumALE
	

பகவான் அருணை நுழை திருப்புகழ் பொருள்

கதவிதழ் அவிழ் உற அன்றுள் சென்று ஐக்கியமானோய்
	
நீ வருகிறாய் அருணைக்கு என்றதும் அருணாசலேஸ்வரர் கோவிலின் கதவுகள் இதழ்கள்
அவிழ்ந்து மலர்வது போல் திறந்து கொள்ள உள்ளே கர்ப்பகிரகத்திற்குச் சென்று ஈஸ்வரனைக் கட்டி
அவனுடன் ஐக்கியமானோய்.. (இதயத்தின் கதவுகளை அருணாசலேஸ்வரர் இதழ்விரிவுபோல்
திறக்க நீ அகந்தை துறந்து ஆன்மப் பொருளுடன் சென்று ஐக்கியமானாய் என்றும் கொள்ளலாம்)
(இளம் பாலகன் வேங்கடராமன் அருணையை அடைந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு
வரும்பொழுது நண்பகல்; கோவில் மூடியிருக்க வேண்டியது. உண்டியல் கணக்குவழக்கு
தினமாதலால் அன்று வேங்கடராமனுக்கு கோவில் விரியத் திறந்தே இருந்தது.)
	
உதறினை உடமையை உன் பற்று உந்தித் தெளிவோனே
ஐயன்குளத்தருகே யாரோவொருவர் கேட்க மொட்டையடித்துக்கொண்டு உன் உடமைகளைப்,
பூணூலைக், காசுகளைக், கையிருந்த உணவை எல்லாம் குளத்தே வீசியெறிந்து, உன்
உலகப்பற்றையெலாம் நீங்கி, தெளிந்த நிலையை அடைந்தோனே.
	
உனை தொழும் அடியவர் எம்பற்றும் பிட்டு அருள்வாயே
உன்னைத் தொழும் அடியவர்கள் நாங்கள். எம்முடைய உலகப்பற்றையும் பிட்டழித்து அருள்வாயே
	
அதிசய மழை நனை அங்கித் தங்கக் கதிரோனே
அன்று மொட்டையடித்து, உடமைகளைத் துறந்து நீ நின்றபோது வேதாகம வழியில் துறவு
மேற்கொள்பவர்கள் தலைமுழுக்குப் போடுவது நியதியென்று அந்த அண்ணாமலையாரே அதிசய
மழையைப் பொழிந்து உன்னை நனைத்துக் குளிக்கவைத்தார். அக்னியும் சூரியனும் போன்று
தங்கமென மழையில் ஒளிர்ந்தவனே
	
அடிமடி வகிர்துணி அங்கத் துண்டைத் தரிபாலா
அடிமடித் துணியைக் கிழித்து அந்த உடற்துண்டைக் கோவணமாய்த் தரித்த பாலனே
	
மதில் அறு அருணையில் என்றைக்கும் தத்துவமானோய்
ஞானத்திற்கு என்றும் மதிலிடாத அருணாசலத்திற்கு வந்த நீ அங்கே என்றைக்குமாய் வேதம்
சொன்ன தத்துவ வாக்கியப் பொருளாய் விளங்குகிறாய்
	
மலை மக ரமண நின் அன்பர்க்கு இன்பப் பெருமாளே
அண்ணாமலையாரின் மகவே ரமணா, நினது அன்பர்கள்
இன்பமளிக்கும் பெருமாளே
	

Praising Bhagavan’s Advent into Arunachala

For you, Oh Ramana!, the doors of Arunchaleswara was wide open like the petals of a flower in bloom. You went inside and became one with the Lord of Arunachala. (In other interpretation, the Lord opened the petals of heart lotus and revealed the Self invitingly and you merged yourself in the heart) (On the day when young Venkataraman came into the temple of Arunachaleswara, it was mid-morning. The doors were wide open as the authorities were engaged in tallying the incoming donations.)

You worshipped the Lord, your real father, in the sanctum sanctorum and told Him that “Thy will be done”. In that moment you became a tool in the Lord’s hands

In Aiyankulam, you left all your possessions, your dress, sacred thread, money and left-over food you had. You became unattached to any worldly thing or person. You became clear and pure Self at that moment.

Won’t you split, sever and release similarly the bondage and attachment, we, (your devotees), have also? Please grace us Bhagavan.

Lord Arunachala made sure that ritualistic bath after renunciation as prescribed in Vedas was given to you, when you renounced everything near Aiyankulam. Yes, a miraculous rain poured. It was trying to make the sun, that is your golden body wet. In that rain, you shone like the rays of the golden sun.

You tore the inner waist cloth of what you wore and made it into a Kaubeena, a loin cloth. You wore just that, Oh young man.

You stayed as “That” forever, embodiment of one reality, in the land of Arunachala that has no boundaries for those who seek knowledge.

Oh the son of Annamalai, the son of Arunachala mountain! Oh Ramana! You, who is the joy for your devotees, Oh PerumalE! (Please grace us.)